Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் திருவிழா : ... காரைக்கால் அம்பகரத்தூர் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது காரைக்கால் அம்பகரத்தூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

16 மே
2022
07:05

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழாவில், பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.

எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமாக வரதராஜ பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா மே 15 ல் தொடங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு ஏற்றி கோயிலில் வழிபட்டனர். பின்னர் இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கருப்பண்ண சுவாமியிடம் விடைபெற்ற பெருமாள், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் 5:40 மணிக்கு வைகையில் இறங்கினார்.

தொடர்ந்து வைகை ஆற்றில் மண்டகப்படிகளில் சிறப்பு பூஜைகள் நடந்து, பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில், ஆற்றுப் பாலம் வழியாக, மஞ்சள் பட்டினம் மண்டகப்படி அடைந்தார். அங்கு காலை 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், மதியம் 3:00 மணிக்கு அனுமார் கோயிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனையடுத்து பெரிய பஜார் வழியாக வைகை ஆற்றில் மாலை 6:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து எமனேஸ்வரம் பகுதியில் அனைத்து நெசவாளர் குடியிருப்புகளுக்கும் சென்ற பெருமாள், நள்ளிரவு வண்டியூர் மண்டகப்படியில் சேர்க்கையாகினார். நாளை இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து அவதார சேவைகளில் அருள்பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar