Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டத்தரசி அம்மன் கோவில் உற்சவ ... காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு: உள்துறை அமைச்சர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2022
04:05

புதுடில்லி: அமர்நாத் புனித யாத்திரை தொடர்பான பாதுகாப்பு மற்றும் பயண நடைமுறைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்தார்.

ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத்தில் உள்ள குகைக் கோவிலில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் வருகை தருவர்.

ஆலோசனை : இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன் 30ல் துவங்கி, ஆக., 11 வரை நடக்க உள்ளது.கடல் மட்டத்தில் இருந்து, 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை கோவிலுக்கு மேற்கொள்ளப்பட உள்ள யாத்திரை தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த யாத்திரை நடக்கவில்லை. 2019ல், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.இந்த ஆண்டு, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரை மேற்கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், சமீபத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன. காஷ்மீரி பண்டிட்டான அரசு அதிகாரி, அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதையடுத்து, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் பயண நடைமுறை ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

ட்ரோன் : ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., தில்பக் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.பயண நடைமுறை தொடர்பாக அமித் ஷா நடத்திய ஆய்வு கூட்டத்தில் சுகாதாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த ஆண்டுகளில், பயணத்தை கண்காணிக்கும் வகையில், வாகனங்களுக்கு ரேடியோ அலைக்கற்றை அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தாண்டு, ஒவ்வொரு யாத்ரீகருக்கும் அதுபோன்ற அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.பாதுகாப்பு பணியில், ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன், 12 ஆயிரம் துணை ராணுவப் படையினரும் ஈடுபட உள்ளனர். ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar