Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகள் கர்ப்பிணியாக வீட்டில் ... வேண்டாமே ‘கொம்பு’
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பர்த்டே பார்ட்டிக்கு போறீங்களா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
02:05


 ‘சாலட்’ தயாரித்துக் கொண்டிருந்தாள் ஒரு தாய். மீதமான காய்கறி கழிவுகளை ஒதுக்கி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகள், ‘‘அம்மா! என் பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்காக கிளப்புக்கு கூப்பிடறாம்மா. நான் போயிட்டு வரட்டுமா...?” எனக் கேட்டாள்.
‘பார்ட்டி’ என்ற பெயரில் இக்காலத்தில் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக தீயவழிக்குச் செல்வதை உணர்ந்த அம்மாவின் கண்களில் கண்டிப்பும் முகத்தில் வெறுப்பும் கொப்பளித்தது.
ஆனாலும் மகள் விடுவதாக இல்லை.
‘‘அம்மா! நீங்க நினைக்கறது சரிதான். ஆனா...என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போறோம். அதனால எந்த பயமும் இல்லை. நான் கட்டாயம் வருவேன்னு சொல்லிட்டேன், ப்ளீஸ் மா. போகாட்டி நல்லா இருக்காது’’ என்றாள்.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தாய் சட்டென ஒதுக்கி வைத்திருந்த கழிவுகளை அள்ளி சாலட்டில் போட்டார்.
மகள் கொதித்தாள்.
‘‘அம்மா! உங்களுக்கு என்ன பைத்தியமா? குப்பையை அள்ளி சாலட்ல போடுறீங்க? அது கெட்டு போயிடாதா?’’ என்றாள்.
‘‘ஏன் அதனால என்ன? கெட்டுப் போனா போகட்டும்’’ என்றாள் அம்மா.
மகள் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தாள்.
‘‘உன்னோட மனம் குப்பையான சிந்தனையை ஏற்க தயாராயிருக்கும் போது, வயிறும் குப்பையான உணவை ஏற்றுக்கொள்ளும்னு நினைச்சேன்’’ என்றார் தாய்.
மகளுக்கு புரிந்தது. தோழிகளிடம் ‘நான் வரவில்லை’ என்று சொல்லி விட்டாள்.
இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது என்ன தெரியுமா...
தவறான பாதையில் உலகம் போகிறதென்றால் நாமும் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. மீறினால் சரியான பாதையில் இருந்து அவை நம்மைப் பிரித்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.         

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar