Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ... 1000ம் ஆண்டு பழமையான கோதீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் 1000ம் ஆண்டு பழமையான கோதீஸ்வர கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஊழியர்களுடன் பக்தர்கள் மோதல்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் ஊழியர்களுடன் பக்தர்கள் மோதல்

பதிவு செய்த நாள்

25 மே
2022
12:05

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சிறப்பு தரிசன டிக்கெட்டில், உள்ளூர் பக்தர்களுக்கு இலவச அனுமதி நேற்று வழங்கப்படவில்லை. இதனால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைக்கலப்பில் முடிந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், பொது தரிசன வழி மற்றும் சிறப்பு தரிசன வழிகள் உள்ளன. பொது தரிசனத்தில் அனைத்து பக்தர்களும், இலவசமாக அனுமதிக்கப்படுவர். இதில் கூட்டம் அலைமோதும். சிறப்பு தரிசன வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்ய, ஒருவருக்கு 150 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முருகன் கோவில் என்பதால், செவ்வாய்க்கிழமைகளில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும், காலை 6:00 மணி முதல், காலை 10:00 மணி வரை சிறப்பு தரிசன வழியில், இலவசமாக உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் முருகன் கோவில் இணை ஆணையராக பொறுப்பேற்ற விஜயா, வி.ஐ.பி., மற்றும் உள்ளூர் பக்தர்கள் தரிசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். அதன்படி, செவ்வாய்க்கிழமையான நேற்று, 100க்கும் மேற்பட்ட உள்ளூர் பக்தர்கள், காலை 6:00 மணி சிறப்பு கட்டண வழியில் இலவசமாக சென்று மூலவரை தரிசிக்க காத்திருந்தனர். ஆனால், அவர்களை அனுமதிக்காத கோவில் ஊழியர்கள் சிலர், கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்லும்படி கூறியதுடன், இது அதிகாரியின் உத்தரவு என்றும் கூறினர்.

இதனால், பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதற்கிடையே, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் வழியாக, திருத்தணியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், மூலவரை தரிசிக்க சென்றார். அப்போது, அங்கிருந்த கோவில் ஊழியர் புருஷோத்தமன் என்பவர், அவரை தடுத்து நிறுத்தியதுடன், பணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்லும்படி கூறினார்.இதனால், லோகநாதனுக்கும், ஊழியர் புருஷோத்தமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென லோகநாதன், ஊழியர் புருஷோத்தமனை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்த ஊழியர்கள், லோகநாதனை சமரசம் செய்து வெளியே அழைத்து வந்து, அவரை தாக்கினர்.இதில், லோகநாதனுக்கு கையில் காயம் ஏற்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து புருஷோத்தமன் அளித்த புகாரின் மீது, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மேலும், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, அரசு மருத்துவ மனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் லோகநாதனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.திருத்தணி பொறுப்பு டி.எஸ்.பி., அனுமந்தன், மலைக்கோவில் வளாகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.

எம்.எல்.ஏ., சமரசம் : முருகன் கோவிலில் சிறப்பு தரிசன வழியில், உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படாததை அறிந்து, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் மலைக்கோவிலுக்கு சென்று, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.அப்போது ஊழியர்கள், இது கோவில் இணை ஆணையர் உத்தரவு எனக் கூறியதை தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களிடம் சமரசம் பேசினார்.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்த வாரம் முதல் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar