Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை சவுந்தரராஜப்பெருமாள் ... ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்! ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு: கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
12:08

பொள்ளாச்சியில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஆற்றங்கரையோரங்களில் மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், காலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகாதீபாராதனையும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.இதுபோல், பொள்ளாச்சியிலுள்ள பெருமாள் கோவில், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களின் வருகையையொட்டி கோவில்களில் நான்கு கால அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆழியாறு ஆற்றின் கரையோரத்தில் மக்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பெண்கள் மஞ்சள் சரடு வைத்து வழிபாடு நடத்தி,
அவற்றை கழுத்தில் அணிந்து கொண்டனர்.மேலும், உள்ளூர்பகுதி மக்கள் மாட்டுவண்டியில் கோவில்களுக்கு சென்று வழிபாடு  நடத்தினர். குடும்ப சகிதமாக மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி, ஆற்றங்கரையோரங்களில் சாப்பிட்டு பண்டிகையை கொண்டாடினர்.சிறப்பு பஸ்கள் இயக்கம்:பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மக்கள் ஆடிப்பெருக்கு பண்டிகையை  கொண்டாட, ஆனைமலை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்களில் கூட்டம்
நிரம்பி வழிந்தது.ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொள்ளாச்சி - ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு 10 பஸ்களும், பழநிக்கு 15 பஸ்களும் இயக்கப்பட்டன. ஆழியாறு பகுதியில் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப பஸ்கள் மாற்றி இயக்கப்பட்டது. மேலும், முக்கிய இடங்களில் டிக்கெட் பரிசோதகர் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கே.டி.எல்., பகுதியில் அமைந்துள்ள மாலையம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது.கோவிலில் அமைந்துள்ள
சித்திவிநாயகர், முருகன், வேணுகோபால், விஸ்வநாதர் விசாலாட்சி, நவக்கிரகங்கள், சனீஸ்வரர், பரிவார சுவாமிகளுக்கு பொதுமக்கள் அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு  மதியம் 12.00 மணிக்கு அமராவதி ஆற்றில் அன்னதானம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மாலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.விழா ஏற்பாடுகளை மாலையம்மன்  அறக்கட்டளை இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்தனர்.மடத்துக்குளம் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ணகோலமிட்டு, கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். காரத்தொழுவு அழகுநாச்சியம்மன்கோவில், சிவன்கோவில், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில், கொழுமம் கோட்டை  மாரியம்மன், காசிவிசுவநாதர், நடராஜர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆடிப்பெருக்கு விழா கோவில்களில் பூஜை

தர்மபுரி: ஆடிப்பெருக்கையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் ஸ்வாமி ஊர்வலம்  நடந்தது.தர்மபுரி அடுத்த கொமத்தம்பட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த 31ம் தேதி கூழ் ஊற்றும் நிகழ்சியுடன் ஆடிப்பெருக்கு  விழா துவங்கியது.நேற்று காலை கொமத்தம்பட்டி ஏரியில் துரியோதனன் வதம் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, அம்மன் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  தர்மபுரி- சேலம் சாலையில் உள்ள பச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி அம்பேத்கர் காலனி சிம்ம வாகன மஹா மாரியம்மன் கோவிலில், ஆடி பதினெட்டு விழா நடந்தது. நேற்று அதிகாலை அம்னுக்கு கங்கை பூஜையும், காலை 10 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 1.30 மணிக்கு அம்மன் புறப்பாடு  மற்றும் பூ மித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  கோட்டை காமாட்சி அம்மன் கோவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்மபுரி கடை வீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன்  கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு அம்மன் மற்றும்  மருதவானேஸ்வரருக்கு பால் அபிஷேகமும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

கிருஷ்ணகிரி ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி: பருவ மழை பொய்த்துப் போனாலும், கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணையில் இருந்து, ஏழு நாட்களுக்கு முன்  தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தென்பெண்ணையாற்று படுகையில் உள்ள கிராமங்களில் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட்டது.ஆண்டு தோறும் ஆடி 18ம் நாள் ஆடிப்பெருக்கு விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கே.ஆர்.பி., அணை மற்றும் தென்பெண்ணையாற்று படுகை, காவிரியாற்று படுகை பகுதியில் சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்திலும், ஆற்றுபடுகை பகுதியிலும் தென்மேற்று பருவமழை பொய்த்து போனதால் கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அனைக்கு நீர் வரத்து குறைந்து அனையின் நீர்மட்டம், 43 அடியாக  இருந்தது.அணையில் இருந்து ஜூலையில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இவ்வாறு திறந்துவிடும் தண்ணீர் ஆற்றிலும் பெருக்கெடுத்து சென்று வந்த நிலையில் ஆடி பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்படும்.இந்தாண்டு அணையில் போதிய நீர் இல்லையென்றாலும், அணையின் கீழ் பகுதியில் உள்ள பாரூர் ஏரிக்கு பாசனத்துக்கு தண்ணீர்  திறந்துவிட அரசு உத்தரவிட்டதால் கடந்த, 26ம் தேதி இரவு அணையில் இருந்து வினாடிக்கு, 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.மேலும் இந்த நீர் இருமத்தூர் வரை சென்றதால் நேற்று ஆடிப்பெருக்கு பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் கொண்டாடினர். கே.ஆர்.பி., அணைக்கு மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு,தென்பெண்ணையாற்றில் நீராடி பெண்ணையாற்றை வழிப்பட்டனர். தென்பெண்ணையாற்று படுகை பகுதியான திம்மாபுரம், காவேரிப்பட்டணம், பென்னேஸ்வரமடம், நெடுங்கல், பேருஅள்ளி, ஆவத்துவாடி, அகரம், மருதேரி, விளங்காமுடி, பாரூர், அரசம்பட்டி, இருமத்தூர் ஆகிய பகுதியிலும் மக்கள் தென்பெண்ணையாற்றில் நீராடி அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் இறைவனை வழிப்பட்டனர்.கே.ஆர்.பி., அணையில் உள்ள மார்கண்டேஸ்வரர் ஆலயத்தில் பசு வாயில் இருந்து தண்ணீர் விழும் இடத்தில் ஏராளமானோர் மொட்டை அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர். புது மணத் தம்பதிகள் ஆற்றுப்படுகை பகுதியில் புது தாலி அணிந்து கொண்டனர்.கே.ஆர்.பி., அணையின் சுற்றுவட்டார பகுதிகளான காவேரிப்பட்டணம், குண்டலஹள்ளி, மோரமடுகு, மிட்டஹள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலாவாக
தென்பெண்ணையாற்றுக்கு எடுத்து வரப்பட்டு ஆற்றுப்படுகையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.காவேரிப்பட்டணத்தை அடுத்த பெரியமலை அடி வாரத்தில் உள்ள தீர்தத்திலும், மலையின் நடுபகுதியில் உள்ள சுனையிலும் ஏராளமான பொதுமக்கள் நீராடினர். இதே போல் குருபரப்பள்ளியை அடுத்த ஆவல்நத்தம் சிவன் கோவிலில் உள்ள ஊற்றில் பொதுமக்கள் நீராடி இறைவனை வழிப்பட்டனர்.ஆடிப்பெருக்கையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் தெய்வங்களுக்கு ஆடு மற்றும்
கோழிகள் பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்டோர் மா விளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.திருவிழாவையொட்டி கே.ஆர்.பி., அணை பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக பொதுப்பணித்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கே.ஆர்.பி., அணை போலீஸார் அணைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் பொதுமக்கள் அணைக்கு வந்து செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

பல்லவன் குளத்தில் ஆடிப்பெருக்கு விழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவை புதுமண தம்பதியினர் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை பல்லவன் குளம் நேற்று அதிகாலை முதல் மாலை வரை பெண்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டா பகுதிகுட்பட்டது என்பதால் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவை அம்மாவட்ட மக்கள் குறிப்பாக புதுமண தம்பதியினர் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டுவிட்ட நிலையிலும் ஆடிப்பெருக்கு விழாவை அம்மாவட்ட மக்கள் கைவிடவில்லை. வீடுகளிலும், கோவில் குளங்களில் தேங்கிய சிறிதளவு
தண்ணீரிலும் ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.புதுக்கோட்டை நகரின் மையப் குதியில் உள்ள சாந்தாரம்மன் கோவில் தெப்பக் குளமான பல்லவன் குளத்தில் நேற்று அதிகாலை முதலே பெண்கள் மற்றும் புதுமண தம்பதியினர் குவியத் துவங்கினர். குளத்தை சுற்றியுள்ள படிகட்டுகளில் அமர்ந்து மஞ்சள் கயிறு, கருகமணி, குங்குமம், மஞ்சள்பொடி, வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றை படையல் செய்து சூடம் காட்டி வழிபட்ட பின் அவற்றை குளத்தில் விட்டனர். புதுமண தம்பதியினர் பழைய தாலிக்கயிற்றை குளத்தில் விட்டபின் பூஜிக்கப்பட்ட புதிய தாலிக்கயிற்றை பெற்றோர் மற்றும் கணவர் உதவியுடன் கட்டிக்கொண்டனர். இதுபோன்று சுமங்கலி பெண்கள் பலர் புத்தாடைகளுடன் கழுத்தில் மஞ்சள்
கயிறு அணிந்தும், நெற்றியில் குங்கும திலகம் இட்டும், தலையில் மல்லிகை பூ சூடியும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்காரணமாக புதுக்கோட்டை பல்லவன் குளம் நேற்று அதிகாலை முதல் மாலை வரை புதுமண தம்பதியினர் உள்ளிட்ட பெண்கள் கூட்டத்தால் அல்லோகலபட்டது. கடற்கரை கிராமங்களிலும் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியது. கட்டுமாவடி, மணமேல்குடி, கோடியக்கரை, மீமிசல், கோட்டைப்பட்டிணம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் ஏராளமான
பெண்கள் புனிதநீராடி ஆடிபெருக்கு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. புதுக்கோட்டை சாந்தநாத சுவாமிக் கோவிலில் வேதநாயகி அம்மனுக்கு சந்தணக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதுபோன்று புவனேஸ்வரி அம்மன் கோவில், அரியநாச்சியம்மன் கோவில், மனோன்மணி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன்கோவில்களில் நேற்று ிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா

பழநி:பழநி பெரியாவுடையார் கோயில், சண்முகநதியில் சப்த கன்னிகள், அஸ்திர தேவருக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி கோயில்களில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரிய நாயகியம்மன், பெரியாவுடையார் கோயில், பட்டத்து விநாயகர்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து பெரியாவுடையார் கோயிலுக்கு, உமாமகேஸ்வரர், உமாமகேஸ்வரி, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் புறப்பாடு நடந்தது. பெரியாவுடையர் மூலவருக்கு சோடஷம் உள்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. கோயில் முன் <உள்ள சண்முகநதி ஆற்றில், சப்த கன்னிகள், அஸ்திர தேவருக்கு, மாவிளக்கு, காதுவளை, கருகமணி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றினர்.கன்னிவாடி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையுடன்
பூஜைகள் நடந்தது.கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில், ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பூஜையில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி
கோயில், கோனூர் சந்தன கருப்பண சுவாமி கோயில், வீருநாகம்மாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சி மலையடிவாரத்தில் உள்ள தலையூத்து அருவியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஏராளமான மக்கள் அருவியில் நீராடினர். புதுமணத் தம்பதிகள் அருவியில் நீராடி, புத்தாடை அணிந்து மலை அடிவாரத்திலுள்ள கோயிலில் வழிபாடு நடத்தினர்.
ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. குழந்தைவேலப்பர் கோயிலில்  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

ஆடி 18ம் பெருக்கு சிறப்பு வழிபாடு தாமிரபரணிக்கு பெண்கள் பூஜை

திருநெல்வேலி : ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.ஆடி 18ம் பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் படித்துறையில் பெண்கள் அதிகாலை நீராடினர். பின்னர் தாமிரபரணி நதியில் பூக்களை போட்டும், தீபாராதனை காட்டியும் வழிபட்டனர். 18 வகையான அன்னங்களை நெய்வேத்யமாக, தாமிரபரணி அம்பாளுக்கு படைத்து வழிபட்டனர். கணவர்கள் ஆரோக்யத்துடன் வாழ திருமாங்கல்யத்தை வைத்து சுமங்கலி பூஜை செய்து, மஞ்சள் சரடு அணிந்து கொண்டனர். அதிக அளவில் புதுமண தம்பதிகளும் நதியில் நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். நாட்டில் சுபிட்சமாக மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

குற்றாலத்தில் ஆடிப்பெருக்கு சுமங்கலி பூஜை வழிபாடு

குற்றாலம் : குற்றாலத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூஜை வழிபாடு நடந்தது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று சுமங்கலி பூஜை வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று குற்றாலம் மெயினருவி பகுதியில் சுமங்கலி பூஜை வழிபாடு நடந்தது. அருவியில் நறுமணப் பொருட்கள் கலக்கப்பட்டது. மஞ்சள், குங்குமம், சந்தனம் கலந்து அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், சட்டை துணி பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் டவுன் பஞ்., தலைவர் ரேவதி, கவுன்சிலர் ராமையா மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar