அன்று காலை8மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்குகிறது.சனி பகவான் தோஷம்,நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம், ராகு.கேது தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சிசுஹத்தி தோஷம், நாகதோஷம், ருதுதோஷம்,செவ்வாய் தோஷம்,ஆகியவை விலக சிறப்பு பூஜைநடைபெறுகிறது.தொடர்ந்து பித்ருக்கள் வழிபாடு,முன்னோர்கள் சாபம் விலக குலதெய்வ வழிபாடு,தட்சிணாமூர்த்தி வழிபாடு,பிரம்மா வழிபாடு,சரஸ்வதி வழிபாடு,மகாவிஷ்ணு வழிபாடு,பார்வதி பரமேஷ்வரன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சுயம்வரா பார்வதி யாகம் அபூர்வமானது. இதில் கலந்து கொண்ட 80 சதவீதம் பேர் திருமணமாகி இந்தாண்டு தம்பதிகளாக பங்கேற்க உள்ளனர். இப்பூஜையில் பங்கேற்க கட்டணம் கிடையாது.பூஜை பொருட்களுடன் ஜாதகம் நகலுடன் கலந்து கொள்ளலாம். வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இடவசதி,உணவு,ஆகியவை செய்யப்பட்டு உள்ளது. கோபி, சத்தியமங்கலத்திலிருந்து அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் தங்களது பெயரை (9790591091,பழனிச்சாமி) என்ற நெம்பரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம். திருமணத்தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், ஆகிய புண்ணிய ஸ்தலங்களில் செய்யப்படும் பூஜை வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகள் இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று பயனடையுமாறு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.