Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலதண்டாயுதபாணி கோவிலில் 9ம்தேதி ... விதவை கோலத்தில் சுமங்கலி பெண்கள் வினோத பொங்கல் விழா விதவை கோலத்தில் சுமங்கலி பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
11:06

நாமக்கல் : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா 4ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நாளை ( ஜூன் 07) செவ்வாய்க்கிழமை ஆதிகேசவப் பெருமாள் கொடியேற்றம், சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

உலகிலேயே ஆண்பாதி, பெண்பாதியாக அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிப்பது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் மட்டுமே. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்செங்கோட்டில் ஆண்டிற்கு ஒருமுறை மிகச்சிறப்பாக வைகாசி விசாக தேர் திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர் திருவிழாவானது திருச்செங்கோடு மாநகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்படுவர். பிறகு திருத்தேர் மீது அமர்ந்து திருக்கொடிமாடசெங்குன்றூரின் (திருச்செங்கோட்டின்) நான்குமாட வீதி வழியாக தேர் இழுக்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர் திருவிழா இந்த ஆண்டு சுபகிருது வருடம் வைகாசி மாதம் 21ஆம் தேதி முதல் ஆனி மாதம் 3ஆம் தேதி வரை (04.06.2022 சனிக்கிழமை முதல் 17.06.2022 வெள்ளிக்கிழமை வரை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

விழாவில் ..
நாளை ( ஜூன் 07) செவ்வாய்க்கிழமை ஆதிகேசவப் பெருமாள் கொடியேற்றம், சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளல்.
ஜூன் 09 (வைகாசி 26) - வியாழக்கிழமை சுவாமி புறப்படுதல், திருமலை வலம் வர எழுந்தருளல்.
ஜூன் 12 (வைகாசி 29) - ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு மங்கைபங்கன் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல், மஹா கணபதி திருத்தேர், செங்கோட்டுவேலவர் திருத்தேர் வடம்பிடித்தல், அருள்மிகு பெருமாள் திருக்கல்யாணம்.

ஜூன் 13 (வைகாசி 30) - திங்கட்கிழமை ஆதிகேசவப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல், அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலை பெயர்த்தல்.
ஜூன் 14 (வைகாசி 31) - செவ்வாய்க்கிழமை அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம்பிடித்தல்
ஜூன் 15 (ஆனி 01) - புதன்கிழமை அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம்பிடித்தல், திருத்தேர்கள் நிலை சேர்ந்த பின்பு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேரோட்டம்.
ஜூன் 17 (ஆனி 03) - வெள்ளிக்கிழமை சுவாமி அதிகாலை திருமலைக்கு எழுந்தருளி திருவிழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar