Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் வளர்பிறை ... மாப்பிள்ளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
312 முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
312 முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2022
03:06

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வலையங்குளம் கிராமத்தில் நாடக குழுவிற்கு மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய திருமலை மெச்சினார் என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வலையங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வேல்முருகன் தங்கள் ஊரில் பழமையான கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்படி, பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில், மாணவர்கள் அஜித்குமார், தினேஷ்குமார், சூரியபிரகாஷ், தர்மர் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதி கண்மாய்க்கரை அருகில் விநாயகர் கோயில் முன்பு திருமலை மெச்சினர் என்ற பெயர் பறைசாற்றும் கல்வெட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது: கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்த போது 312 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது காணமுடிந்தது‌. தமிழர்களின் தொன்மையான கலைகளில் ஒன்று நாடகம். கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் எனப் பெயர் பெற்றது.

குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக் கலை பற்றிய சான்றுகள் உள்ளது. மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி., 1526 முதல் 1736 வரை நிர்வாகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பு பெற்று விளங்கினார்கள். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் திருவிழா மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். குறிப்பாக வலையங்குளம் பகுதியில் திருவிழா காலத்தில் தொண்ணூத்தி எட்டு நாட்கள் தொடர்ச்சியாக புராணம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நாடகம் நடைபெறுவது வழக்கம். வலைமங்குளத்தை சேர்ந்த நாடகக் குழுவினர் திருப்பரங்குன்றம் கோயில் ராஜ வீதியில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தினர். திருமலை நாயக்கர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்தபோது நாடகத்தைப் பார்த்து மெச்சிப்போனார். நாடக குழுவினரை அழைத்து பாராட்டி திருமலை மெச்சினார் என்ற சிறப்புப் பட்டமாக தன் கையால் செம்பு பட்டயம், 64 உப்பில்லா கட்டிகளை வழங்கினார். மேலும் குதிரையை எல்லையில் ஓடவிட்டு அக்குதிரை நிற்கும் இடம் வரை நிலத்தில் விளையும் பொருட்களின் ஒரு பங்கு நாடகக் குழுவினருக்கு தரும்படி கட்டளையிட்டார். அக்குதிரை ஓடிய இடத்தை எல்லையாக குறிக்கப்பட்ட பகுதி தற்போது குதிரைக்குத்தி என்று அழைக்கப்படுகிறது.

கல்வெட்டுச் செய்தி வருமாறு: வலையங்குளம் கண்மாய் அருகே ராணி மங்கம்மாள் சாலையின் ஓரமாக ஆலமரத்தின் அடியில் 3 அடி நீளம், 2 அடி அகலம், பத்து வரிகள் கொண்ட தனி கருங்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளது.இக்கல்வெட்டில் சாலிய வாகன சகாப்தம் 1710 வருடம் 15 திங்கள்கிழமை பூரண நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் வலையங்குளத்தில் இருக்கும் திருமலை மெச்சினார் பெருமை பெற்ற நாடக கலை சங்கமறிய விநாயகர் கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து திருமலை மெச்சன் உபயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் திருமலை மெச்சினார் வம்சம், வலையங்குளம் விநாயகர் கோயிலில் திருப்பணிகள் செய்ததை அறிய முடிகிறது. தற்போது வரை வலைமங்களத்தில் மட்டுமல்ல சுற்றியிருக்கிற கிராமங்களில் நடக்கும் விசேஷங்களில் திருமலை மெச்சினார் வம்சத்திற்கு தனி மரியாதை உண்டு. தொடர்ந்து தொன்று தொட்டு ஐந்தாவது தலைமுறையாக தலையங் குளத்தில் திருமலை மெச்சினர் நாடகக் குழுவினர் தான் அரங்கேற்றி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் சமீபத்தில்தான் 428 வது நாடகம் நடைபெற்றது. தமிழகத்தில் அதிகமான நாட்களில் நாடகம் நடக்கும் இடம் வலையங்குளம் என்பது மற்றொரு சிறப்பு என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar