“மனிதர்கள் செய்யும் எல்லா குற்றங்களுக்கும் பரிகாரம் உண்டு. ஆனால் தீயகுணத்திற்கு மட்டும் பரிகாரம் இல்லை’’ என்கிறார் நாயகம். தொற்று நோய் போன்றது தீயகுணம். மனதிற்குள் ஒரு தீமையை அனுமதித்தால் இன்னொரு தீமையும் நம்மைத் தொற்றும். நம்மிடமுள்ள தீய குணங்களை அடையாளம் தெரிந்து துாக்கி எறிய வேண்டும். இல்லாவிட்டால் நாம் இறைவனை நோக்கி தொழுகையில் ஈடுபட்டாலும் பலன் கிடைக்காது.