Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏராளமான ... அவதூத சித்தர் சுவாமிகள் 57வது அவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் விக்ரகங்களை மியூசியங்களில் வைக்க கூடாது : முன்னாள் ஐ.ஜி., வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
கடவுள் விக்ரகங்களை மியூசியங்களில் வைக்க கூடாது : முன்னாள் ஐ.ஜி., வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2022
04:06

தர்மபுரி: ‘‘இதுவரை மீட்கப்பட்ட கடவுள் விக்ரகங்களை, மியூசியங்களில் வைக்காமல் கோவில்களின் வைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறினார். தர்மபுரியில் நேற்று, உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:உலகிலுள்ள அனைத்து சிவனடியார்களும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

கோவில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சிவனடியார் கூட்டத்தின் நோக்கம். கோவிலிலுள்ள, 3 லட்சத்து, 50 ஆயிரம் கடவுள் விக்ரகங்களை, ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகள் கையில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை. கோவில்களை பொறுத்தவரையில், 700க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. அறநிலையத்துறையே இந்த குற்றங்கள் நடந்துள்ளன என, ‘அபிடவிட்’ தாக்கல் செய்துள்ளனர்.கடந்த, 1960ல் இந்திய அரசு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி சிவன் கோவிலில் எடுக்கப்பட்ட உமா பரமேஸ்வரி விக்ரகத்தை இங்கிலாந்து ராணிக்கு பரிசாக வழங்கியது கண்டனத்துக்குரியது. இதை மீட்டுவர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேர, சோழ, பாண்டியர்களால் படைக்கப்பட்ட கடவுள் விக்ரகங்களை, வரும் காலங்களில் பரிசாக கொடுக்க கூடாது. சமீபத்தில் நடராஜர் தெய்வத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது, 20 மாவட்டங்களில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.தமிழக கோவில்களிலுள்ள, 26 ஆயிரம் அர்ச்சர்கள் இன்னும், 10 ஆண்டுகளில் அர்ச்சகர் பணியில் இருக்க மாட்டார்கள். அவர்களது குழந்தைகளும் அர்ச்சகர் பணிக்கு வரவிரும்பவில்லை. அர்ச்சகர், மங்கள வாத்தியம் வாசிப்பவர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில்கள் பெயரில், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், முந்திரி, பாதம் உள்ளிட்டவை சாப்பிட்டு, சொகுசு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்ட கடவுள் விக்ரகங்களை, மியூசியங்களில் வைக்காமல் கோவில்களின் வைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar