Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் இசக்கியம்மன் ... கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2022
11:06

ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. 


சிவசைலம் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோயில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த3ம் தேதி கும்பாபிஷேக கால் நாட்டுதல் வைபவம் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை7.45 மணிக்கு திருப்பணியாளர்கள் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ௬ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பூஜையில் தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகஞான பரமாச்சார்ய சுவாமிகள், சென்னை ரெப்கோ நிறுவன சேர்மன் சிவசைலம், பவானி சிவசைலம், கோவை பைமெட்டல் பியரிங்ஸ் நிர்வாக இயக்குனர்குமார் (எ) நாராயணன், லட்சுமி நாராயணன், கல்யாணி, அண்ணல் அனந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மேளதாளம் முழங்ககடம் புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு சுவாமி விமானத்தில் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.


பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், கோயில் அர்ச்சகர் நாரம்புநாதபட்டர் புனித நீர்ஊற்றினர். அம்பாள்விமானத்தில் கணேசபட்டர், ராஜகோபுரத்தில் சிவா சிவாச்சார்யகுழுவினரும் கும்பாபிஷேகத்தினை நடத்தினர். தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலைசுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், திருவீதியுலா, அத்திரிமுனிவருக்கு சுவாமி அம்பாள் காட்சியளித்தல் நடந்தது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் கிருஷ்ணவேணி, ஆய்வாளர் சரவணகுமார், செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் கும்பாபிஷேக குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்,

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar