Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ... கீரனூர் அழகிய சொக்கநாதப் பெருமாள் கோயில் பாலாலயம் கீரனூர் அழகிய சொக்கநாதப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை கோவில்களில் மண்டல பூஜை நிறைவு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறை கோவில்களில் மண்டல பூஜை நிறைவு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2022
11:06

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேகத்துக்கு பின், 48வது நாள் மண்டல பூஜையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வால்பாறை நகரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மே மாதம், 8ம் தேதி நடந்தது.


தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. இதில், சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இந்நிலையில், மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானை சமேததராக முருகப்பெருமான் அருள்பாலித்தார். மதியம், 1:00 மணிக்கு நடந்த அன்னதான விழாவை, கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு துவக்கி வைத்தார்.விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் முருகானந்தம், செந்தில்குமார், இருளப்பன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.* கிணத்துக்கடவு, வடசித்துாரில் பழமையான சோளியம்மன் கோவிலில், கடந்த மாதம், 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜை துவங்கி, 48 நாள் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் ஆராதனை நடந்தது.மண்டல பூஜை நிறைவு நாளில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்த வழிபாடு மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar