Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு ... பொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்! பொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்!
முதல் பக்கம் » துளிகள்
பண்புள்ளவனைத் தெய்வமாக உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் : விவேகானந்தர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜன
2011
05:01

ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்த தினம்: உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்துவிடும். மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர்களையும் விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை.லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான். கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் தானாவே வந்துசேரும்.  உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் ஆன்மிகவாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.உள்ளத்தூய்மையும், மனவலிமையும் உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்  பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே  ஆன்மிகம்.

உள்ள உறுதியோடு இருங்கள். அதற்கு மேலாக மனத்தூய்மையும், முழு அளவில் சிரத்தை உள்ளவராகவும் இருங்கள்.பிறருடைய நன்மையைச் சிறிது நினைத்தாலும் கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றல் நம்மிடம் இதயம் பெற்றுவிடும். வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.ஒருகாலத்தில் நீங்களே வேதகால ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது வேறுவடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் முழுமையாக நம்பிக்கை வையுங்கள். தைரியமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்லுங்கள். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளராக இருங்கள்.சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் இந்த உலகையே ஆட்டி வைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகள். அதனால் எதற்கும் அஞ்சிவிட மாட்டீர்கள். சிங்கக்குட்டிகளைப் போலத் திகழ்வீர்கள்.ஓய்வு ஒழிவு இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், அந்த வேலைகளில் கட்டுப்பட்டு விடாதீர்கள். அதற்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.நீங்கள் ஒரு எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும். அடிமையைப் போல அல்ல. சுதந்திரமாகவும், அன்போடும் கடமைகளைச் செய்யுங்கள்.

அன்பின் அடிப்படையிலும், அன்பின் மூலமாகவும் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மனஒருமைப்பாடு ஆகும். வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் தன்னம்பிக்கையோடு வாழ்பவனே பெருமையும் ஆற்றலும் பெற்றுத் திகழ்கிறான். உலகின் எந்த நாட்டு வரலாறானாலும் இந்த உண்மையை நம்மால் உணர முடிகிறது.மனிதர்களின் துணை எவ்வளவு கிடைத்தாலும், அதை எல்லாம்விட கடவுள் துணையே மிகவும் பலம் மிக்கதாக நமக்கு வழிகாட்ட வல்லது.யாருடைய நம்பிக்கையையும் குலைக்காமல், முடிந்தால் அவனை மேலே தூக்கிவிட முயற்சி செய்யுங்கள்.அனைவர் மீதும் அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறருக்காக உழைத்துக் கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.பிறருக்காகச் செய்யும் சிறுமுயற்சி கூட நமக்குள் சிங்கத்தின் வலிமையை தரவல்லதாகும். விரும்புகிற வேலையைச் செய்வதில் என்ன பெருமை இருக்கிறது? எந்த வேலையாக இருந்தாலும், அதை தனக்கு விருப்பமானதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி. ஒரு பணியைச் செய்வதாக இருந்தால், எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும்.அடிமையைப் போல அல்ல. தன்னை அடக்கப் பழகியவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்படுவதில்லை. அவனுக்கு அதன் பின்னர் அடிமைத்தனம் என்பதே இல்லை.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். சோம்பல் ஒருபோதும் நமக்கு உதவாது. வேண்டாத குணங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முழு வலிமையோடு செயலில் இறங்கினால், வெற்றிக்குரிய வழியை இறைவனே காட்டி நிற்பான்.உடம்பை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ள பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதை வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் கற்றுத் தாருங்கள். காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.கடினமான உடல்வேலைகளில் ஈடுபடுங்கள். மனம், உடல் இரண்டுக்கும் சரிசமமாகப் பயிற்சி கொடுங்கள்.  துன்பங்கள் மலைபோல நின்று பயமுறுத்தினாலும், பயப்படாதீர்கள். காலால் மிதித்து நசுக்கிவிடுங்கள். பயத்திற்கு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது. காலத்திற்கு எல்லையில்லை. முன்னேறுங்கள். திரும்பத் திரும்ப உங்களின் உண்மை இயல்பான தைரியத்தை மனதில் கொள்ளுங்கள். பிரகாசம் உங்களை வந்தடைந்தே தீரும்.மூன்று விஷயங்கள் இப்போது உங்களுக்குத் தேவை. லட்சியத்தை உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறனுள்ள மூளை, வேலை செய்யக்கூடிய கைகள். இம்மூன்றும் இருந்தால் வெற்றி உங்களைத் தானாக வந்தடைந்துவிடும்.விழிப்புணர்வுடன் செய்யும் பிரார்த்தனையின் மூலம் எல்லா விருப்பங்களும் நிறைவேறும். பிரார்த்தனையின் போது நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்பு பெறுகின்றன.

கற்பு என்பது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருபாலாரிடமும் இருக்கவேண்டிய நன்னெறி ஆகும்.நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல், தோற்றம் கூட மாறிவிடும். நீங்கள் மனிதகுலத்திற்கே ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். வலிமையுள்ளவர்களாக, மனத்தூய்மை மிக்கவர்களாக எண்ணினால் நிச்சயம் அப்பண்புகள் உங்கள் உணர்வோடு கலந்துவிடும்.நீங்கள் மகத்தான பணிகளைச் செய்வதற்காகப் பிறந்திருக்கிறீர்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. எழுந்து நின்று துணிவுடன் உங்கள் கடமையைச் செய்யுங்கள். பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் நமக்கு நாமே நன்மை செய்தவர்களாகிறோம். நன்மை பெறுவதற்கான ஒரே வழி இது மட்டும் தான். எப்போதும் விரிந்து மலர்வது தான் வாழ்வின் பயனாகும். உங்கள் மனம் பரந்தநோக்குடன் திகழட்டும். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிச்சிகரத்தை எட்டிப் பிடிக்கத் தேவையான குணங்கள். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத்தவிர தனியாக வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை. உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.

- விவேகானந்தர்

 
மேலும் துளிகள் »
temple news
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar