Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இஸ்ரோ ... கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஊஞ்சல் சேவை கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண துறவிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண துறவிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2022
11:07

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணத்துறவிகள் உயிர்நீத்த செய்தி கூறும் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துபாண்டி, முருகன் கூறியதாவது: சமண துறவி அரிட்ட நேமிபடாரர் நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்ற செய்தியை கூறும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கிரந்தம், தமிழில் எழுதப்பட்டுள்ளது. அரிட்ட நேமிபடாரர் நிசிதிகை இது என்பது இக்கல்வெட்டின் குறிப்பு. சில வரிகளில் சேதமானதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என தெரியவில்லை. கல்வெட்டில் உள்ள நிசிதிகை என்ற சொல் பாண்டியநாட்டு கல்வெட்டில் இதுவரை இடம் பெற்றதில்லை. இதுவே பாண்டியநாட்டின் முதல் நிசிதிகை கல்வெட்டு. சமண தொடர்புள்ள குன்றத்தில் முதல் முறை சமண துறவி நோன்பிருந்து உயிர்நீத்த கல்வெட்டு கிடைத்துள்ளது. சங்ககாலத்திலேயே உயிர் போக்குவது குறித்து கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வரலாறு கூறுகிறது. இவ்வழக்கம் 10ம் நுாற்றாண்டு வரை தொடர்ந்தது என்பதற்கு குன்றத்து கல்வெட்டு சான்று. கல்வெட்டு உள்ள இடத்தில் உடைந்த செங்கல், சிதைந்த கட்டட பகுதி, பானை ஓடுகள் இருப்பதால் துறவியர் மடம் உள்ளது என்ற முடிவுக்கு வரலாம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கல்வெட்டை வாசித்து விளக்கம் அளித்தார் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar