Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் ... வாசுதேவநல்லுார் சிந்தாமணிநாதசுவாமி கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம் வாசுதேவநல்லுார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளி கோவிலாக மாறியது திரிபுரா போர் நினைவிடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளி கோவிலாக மாறியது திரிபுரா போர் நினைவிடம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
10:07

 ஸ்ரீநகர்-வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் எல்லை பகுதியில், போர் நினைவிடமாக காளி கோவில் கட்டப்பட்டுள்ளது.கடந்த 1971ல், பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு வங்காள ரெஜிமென்ட் வெகுண்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தியாவின் உதவியுடன் வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது.

பதுங்கு குழி: அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் கமாண்டராக இருந்த மேஜர் பி.கே.கோஷ், பார்டர்மேன் என்ற பி.எஸ்.எப்., படையின் பத்திரிகையில் எழுதிஉள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:அப்போதைய கிழக்கு பாகிஸ்தானை ஒட்டியுள்ள திரிபுராவின் ஸ்ரீநகர் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு எல்லை பாதுகாப்புப் படையின் முகாம் உள்ளது. இதுவே, பாகிஸ்தான் ராணுவத்தை அப்போது தடுத்து நிறுத்தியது.ஸ்ரீநகரில் உள்ள நம் படையின் நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. பிரசிசன் டார்க்கெட் எனப்படும் முக்கிய இலக்காக அந்தப் பகுதி அமைந்தது. அதாவது, 10 நிமிடங்களுக்குள் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியில் சுடுவது. இவ்வாறு சுடும்போது, அந்த இலக்கு தகர்ந்து விடும்.ஸ்ரீநகரில் உள்ள பதுங்குக் குழியில், ஒரு நேபாளி கிறிஸ்துவர், ஒரு மேற்கு வங்க முஸ்லிம் மற்றும் ஹிந்து வீரர் இருந்தனர். அவர்களை வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் தகவல் அனுப்பினோம்.

போர் காளி கோவில் : அந்த நேரத்தில் ஹிந்துக் கடவுள் காளியை வேண்டிக் கொள்ளும்படி மற்ற இருவருக்கும் ஹிந்து வீரர் கூறினார். மாற்று மதத்தினராக இருந்தபோதும், அவர்களும் வேண்டிக் கொண்டனர்.ஒரு குளம் மற்றும் அதைச் சுற்றி புதர்களுக்கு இடையே இந்த பதுங்குக் குழு அமைந்திருந்தது. மேலும் அங்கிருந்த மூங்கில் மரங்கள் தடுப்பு அரணாக இருந்து அவர்களை பாதுகாத்தது.அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் போர் நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, போர் காளி கோவில் கட்டும்படி, படையில் இருந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வீரர்கள் கூறினர். அதையடுத்து நிதி திரட்டப்பட்டு, அங்கு கோவில் கட்டப்பட்டது.இது தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. மத சகிப்புதன்மை குறைந்து வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற சம்பவங்கள், நம்மிடையே இருந்த மதநல்லிணக்கத்தை நினைத்து பார்க்க வைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar