Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபிராமி அம்மனுக்கு இன்று ... வருணபகவான் கருணைக்கு ஏக்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேக விழாவுக்கு தடை கண் திறந்து பக்தர்கள் பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2012
10:08

ஆத்தூர்: ஆத்தூர் அருகே இந்து அறநிலையத்துறை தடை காரணமாக, கும்பாபிஷேகம் நடத்தாமல், ஸ்வாமி சிலைகளுக்கு கண் திறந்து வைத்து, பக்தர்கள் பூஜை செய்தனர். ஆத்தூர் அருகே பழனியாபுரி கிராமத்தில், பழமை வாய்ந்த ராயதுரை, பச்சை அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருவதால், பொதுமக்களிடம், கோவிலை ஒப்படைக்கும்படி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மீது, பழனியாபுரி கிராம மக்கள், நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், சிதிலமடைந்து காணப்பட்ட கோவில் மற்றும் ஸ்வாமி சிலைகளை, கிராம மக்கள் சார்பில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் (8ம் தேதி), கும்பாபிஷேகம் செய்து, ஸ்வாமிக்கு கண் திறந்து வைத்து, பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேல், முனியன், வரதராஜ் உள்ளிட்ட பத்து பேர், கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அதையடுத்து, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள், கோவில் கும்ப கலசத்தில் தண்ணீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வதற்கும், ஸ்வாமி சிலைகளுக்கு, "கண் திறக்கவும், தடை விதித்தனர். அதனால், அதிர்ச்சிக்குள்ளான கிராம மக்கள், 500க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், ஆர்.டி.ஓ., முத்துராமலிங்கம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, கும்பாபிஷேகம் செய்யாமல், ஸ்வாமி கண் திறந்து பூஜை செய்வதற்கு, ஒப்புதல் தெரிவித்தனர். தொடர்ந்து, டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையிலான போலீஸார், கும்பாபிஷேகத்துக்கு கட்டியிருந்த சாரங்களை பிரித்தனர்.நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில், ராயதுரை, பச்சை அம்மன் கோவில் ஸ்வாமி சிலைகளுக்கு, "கண் திறந்து வைத்து, பூஜை செய்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar