Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் சோம வார பிரதோஷ ... ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் தேரோட்டம் ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு கபாலீஸ்வரர் சார்பில் வஸ்திர மரியாதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு கபாலீஸ்வரர் சார்பில் வஸ்திர மரியாதை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2022
08:07

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு, வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்துார் நாச்சியார், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோவில்களில் இருந்து, திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

சட்டசபை மானியக் கோரிக்கையின்போது, மற்ற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், தமிழக கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட, வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பழநி தண்டாயுதபாணி கோவிலில் இருந்து, கேரளா, சபரிமலை சாஸ்தா கோவிலுக்கும்; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திரா ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கும். பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து, கர்நாடகம், மைசூரு சாமுண்டிஸ்வரி அம்மன் கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்க, அர்ச்சகர், பட்டாச்சாரியார்களை ஆலோசித்து, கோவில் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு, வஸ்திர மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற மாநில கோவில்களுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்தரமோகன், கூடுதல் கமிஷனர் கண்ணன், மயிலாப்பூர் கோவில் இணை கமிஷனர் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar