மாங்கனி திருவிழா :பிக்ஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2022 07:07
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை மற்றும் மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான பரமதத்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபம் நடந்தது.அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தது. இதில் மேளதாளம் முழுங்க பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இன்று(13ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி திருவிழா மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.