திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2022 12:07
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். இத்தலத்தில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.