38 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2022 11:07
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர், பூக்குளம் ஆகிய 2 கிராமம் இணைந்து 38 ஆண்டுகளுக்கு பின்பு அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடத்த முடிவு செய்தனர்.மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புளியங்குடி கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. கிராமமக்கள் காப்புகட்டி தினந்தோறும் கும்மி அடித்து, ஒயிலாட்டம் ஆடி வந்தனர். பின்பு புளியங்குடி கிராமத்தில் இருந்து செய்யப்பட்ட குதிரைகளை கிராமமக்கள் ஊர்வலமாக தூக்கி வந்தனர்.பின்பு இளஞ்செம்பூர்,பூக்குளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். கிராமமக்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த 38 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழாவால் முதுகுளத்தூர் சுற்றியுள்ளார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.