Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ... காணிப்பாக்கம் வர சக்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள் காணிப்பாக்கம் வர சக்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால்நாட்டு வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால்நாட்டு வைபவம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
08:07

விக்கிரமசிங்கபுரம்: காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் வளாகத்தில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.


காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோயிலில் மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார், கிலி பூதத்தார் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் கோயில் பொறுப்பாளர் டி.என். எஸ்.எம். சங்கராத்மஜன், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி உட்பட கோயில் கோமரத்தாடிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு ஏற்பாடுகள் : விழாவை முன்னிட்டு, வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அகஸ்தியர்பட்டியிலிருந்து தினமும் 120 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்குச் செல்ல காணிக்குடியிருப்பிலிருந்து இரவு 7 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆண்களுக்கு 200, பெண்களுக்கு 200 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 400 தற்காலிக கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது. ஓட்டல் மற்றும் கடைகளில் வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோயில் மற்றும் இதன் சுற்றுப்பகுதிகளில் 45 தண்ணீர் பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடுகள் வெட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்யும் போது தண்ணீரில் ஆட்டின் ரத்தம் கலப்பதை தடுக்கும் விதமாக பட்டவராயன் சந்நதிக்கு முன் சிறப்பு மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முறையான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar