Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயம் போக்கும் அம்பிகை புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பராசக்தியைச் சரணடைவோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
10:07


மகாகவி பாரதியார் தன்னை “சக்திதாசன்” என்றே அழைத்துக் கொள்வார். அவரைப் போல நாமும் அம்பிகையை வழிபட்டு பலன் பெறுவோம்.
    இந்த உலகம் பராசக்தியின் கருணையால் தான் இயங்குகிறது. ஆனால் நாம் தான் உலகை நடத்துகிறோம் என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. நான் இல்லாவிட்டால் இந்த இயக்கம் நடக்குமா? இந்த வீடு முன்னேறுமா?  இந்த அலுவலகம் இயங்குமா? என்ற எண்ணத்தை, சொல்லை கோபத்தின் உச்சத்தில்  எல்லோரிடத்திலும் எல்லா இடங்களிலும் கேட்கிறோம்.
    ஆனால் உண்மை என்ன? யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் இயங்கும். நாம் இருக்கும் இடத்தை நம்மை விடப் பல மடங்கு கெட்டிக்காரன் ஒருவன் நிரப்புவான். காரணம்? இந்த பிரபஞ்சத்தை இயக்குபவள் பராசக்தி தானே! நாம் ஒரு கருவி மட்டுமே! இதை உணர்ந்து நாளும் விடியற்காலையிலேயே பராசக்தியிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.  ‘தன்னால் எதுவும் இயலாது’ என்பதனை உணர கஜேந்திரன் என்னும் யானை அரசனுக்கு  ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது.   தன்னால் தன்னைக் காக்க முடியும் என்னும் ஆணவம் உடைந்து போகும் சூழல் வந்த பிறகே திரவுபதிக்குத் கடவுளின் சிந்தனை வந்தது. இவர்கள் இருவரையும் தினமும் காலையில் நினைக்க வேண்டும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். காரணம் இவர்களைப் போல தாமதமாக கடவுளை நினைக்காமல், ‘என்னிடம் ஒன்றும் இல்லை; எல்லாம் உனது செயல்’ என்னும் அறிவுடன் பராசக்தியைச் சரணடைய வேண்டும்.
 மகாகவி பாரதியார், ‘தேடி உன்னைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரியம்மா’ என்கிறார். தேடி என்பது வெளியுலகில் அல்ல மனதிற்கு உள்ளே. ஆடி மாதத்தில் கிராமத்தினர் வழிபடும் அன்னை முத்துமாரியை தேசத்திற்கு உரிமையாக்கியவர் மகாகவி. தேச முத்துமாரி என்றே அழைக்கின்றார். அவளை தேடிச் சரணடைந்து, மெய்யுருகப் பாடி சரணடைவோம்.
  எப்போதும் ஏதாவது ஒன்றை எண்ணி நாம் கவலைப்படுகிறோம். பஸ் ஸ்டாப்பில் பஸ் வராவிட்டால் கவலை. வந்ததும் கூட்டத்தில் முண்டியடித்து ஏற வேண்டுமே என்ற கவலை. ஏறினால் இடிபடாமல் நிற்க வேண்டுமே என்ற கவலை. பின்னர் உட்கார இடம்  வேண்டுமே என்ற கவலை. உட்கார்ந்தவுடன் இடிபடாமல் இருக்கத் தகுந்த ஆள் வர வேண்டுமே என்ற கவலை. குறித்த நிறுத்தத்திலே இறங்க வேண்டுமே என்ற கவலை... இப்படி அடுக்கலாம்.
    காரணமின்றி கவலை கொள்வதில் நாம் கெட்டிக்காரர்கள் அல்லவா? அது தீர என்ன செய்ய வேண்டும். மனதார உனக்கு சேவை செய்ய வேண்டும். உனது வடிவாக இருக்கும்  உயிர்களுக்கு சேவை செய்ய வேண்டும். உன் திருநாமத்தைச் சக்தி, சக்தி என்று சொல்லிப் பாடியுருகி பக்தி செய்தால் பயம் போகும். கவலைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் பயம் தான். உன்னைச் சரணடைந்து பாடினால் கேடுகள் நீங்கும். குறைகள் தீரும். பக்தி பெருகும்.  கோடி நலம் பெருகும். எப்போதும் சந்தோஷமாக வாழலாம். இதற்கு செய்ய வேண்டிய ஒரே  செயல்  பராசக்தியை சரணடைதல் தான்.
    தேடியுனை   சரணடைந்தேன்   தேசமுத்து   மாரி
    கேடதனை   நீக்கிடுவாய்   கேட்ட வரம்;   தருவாய்
    பாடியுனைச்   சரணடைந்தேன்   பாசமெல்லாங்   களைவாய்
    கோடிநலஞ்   செய்திடுவாய்   குறைகளெல்லாம்   தீர்ப்பாய்
    எப்பொழுதுங்   கவலையிலே   இணங்கி   நிற்பான்   பாவி
    ஓப்பி யுனதேவல்   செய்வேன்   உனதருளால்   வாழ்வேன்
    சக்தியென்று   நேரமெல்லாங்   தமிழ்க்கவிதை   பாடி
    பக்தியுடன்   போற்றி   நின்றால்   பயமனைத்தும்   தீரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar