Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி கிருத்திகை திண்டிவனத்தில் ... பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக இலவசமாக யோக தியான வகுப்புகள் பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2022
05:07

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப, மயில் மற்றும் அன்னக்காவடிகளை தோளில் சுமந்து, மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தாலும், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், வடபழனி முருகன், கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீசுவரர், பாடி திருவலிதாய நாதர், அண்ணாநகர் மேற்கு தென்றல் காலனி பாலசுப்பிரமணிய சுவாமி, அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர், குரோம்பேட்டை குமரன் குன்றம், குன்றத்துார் முருகன், பிராட்வே காளிகாம்பாள் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று முருக பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலை, மயில் வாகனத்தில், முருகப் பெருமான் வீதியுலா நடந்தது. இந்த கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். வடபழனி, கந்தகோட்டம் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வரிசைகளில் நின்று மூலவரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar