Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ... கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமணம்: திரளானோர் வழிபாடு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமி மாட வீதி உலா
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமி மாட வீதி உலா

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2022
11:07

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை விழா விமரிசையாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை, மாசி, கார்த்திகை, ஆடி மாதங்களில், கிருத்திகை விழா கொண்டாடப்படும். இந்தாண்டு ஆடி கிருத்திகை விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.மொட்டை அடித்து, அலகு குத்தி, காவடி எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதாரம், சிறப்பு பேருந்து வசதிகள், பாதுகாப்பு என, அந்தந்த அரசு துறையினர், ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிருத்திகை விழாவில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டு சென்றனர். இரவு, சுவாமி மாட வீதி உலா நடந்தது.

சிங்கப்பெருமாள் கோவிலில் விசேஷம் : சிங்கப்பெருமாள் கோவில், ரயில் நிலைய தெருவில் பழமையான சிங்கை சிங்காரவேலன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆடி கிருத்திகை திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, 108 பால்குடம் எடுத்த பக்தர்கள், குளக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.காலை 10:30 மணிக்கு அக்னி சட்டி நிகழ்ச்சியும், 12:00 மணிக்கு சிங்கார வேலனுக்கு மிளகாய் பொடி அபிஷேகம், மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சியும் நடந்தன.மாலை 3:00 மணிக்கு, நேர்த்திக்கடனாக பக்தர்கள் சடல் சுற்றுதல், பறவை காவடி எடுத்து, சுவாமிக்கு மாலை அணிவித்தனர். 108 வேல் குத்துதல், உரல் இழுத்தல், காவடி எடுத்தல், ஆட்டோ இழுத்தல் நேர்த்திக்கடன் நிகழ்த்தினர். 100க்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதிஉலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar