திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு வரும் 28ம் தேதி சிறப்பு சேவை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2022 07:07
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 28ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் பூவலங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 28 ம்தேதி வியாழக்கிழமை ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை நடக்கிறது.காலை 8:30 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள் பூவலங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:0 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.