Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ... ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் தேர்பவனி ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோயிலில் 31ல் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
சங்கரநாராயண சுவாமி கோயிலில் 31ல் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
10:07

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னொரு காலத்தில் பக்தர்களிடையே ‘ சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் ‘ என்ற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது ‘ சிவன், விஷ்ணு இருவரும் ஒருவரே ‘ என்று பக்தர்களுக்கு விளக்கும் வகையில் காட்சி தரக் கோரி கோமதி அம்பாள் சங்கரலிங்க சுவாமியை வேண்டி ஒற்றை காலில் தபசு இருந்தார். அம்பாளின் வேண்டுகோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் ஒரு பகுதியை சிவனாகவும், மற்றொரு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி ‘சங்கரநாராயண சுவாமியாக’ காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டுக்கான ஆடித்­தபசு திருவிழா வரும் 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்பாள் சன்னதி முன் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 9ம் திருநாளான ஆகஸ்ட் 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 10ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சங்கரலிங்க சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கிறார். விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar