ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் தேர்பவனி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2022 11:07
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத்திருவிழாவில் தேர் பவனி நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் சிறப்பு பெற்ற புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருபபலியும், நற்கருனை ஆராதனையும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையில் துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. அதனைத்தொடர்ந்து, காலை 10மணிக்கு ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் திருவீதி உலா வந்தனர். தேர் பவனியின் போது பங்கு தந்தையர்கள், பங்கு இறைமக்கள் மற்றும் கடலோர கிராம மக்கள், ஆலயத்தை சுற்றியுள்ள கிராமமக்கள் திரளாக பங்கேற்றனர். அப்போது மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி பூ, மிளகு தூவி மாதாவை வணங்கி மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை கிஷோக் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., டேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.