Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா : தாணிப்பாறையில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா : தாணிப்பாறையில் குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
07:07

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா, பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. இதற்காக தாணிப்பாறையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்

இக்கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜுலை 25) முதல் ஜூலை 30 வரை 6 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கண பக்தர்கள் குவிந்திருந்தனர். அதிகாலை 05:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களிடமிருந்த பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டது. மதியம் மூன்று மணி வரை சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 04:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சுந்தரமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள், எளிதில் தீப்பற்றும் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை மோப்பநாய் சிமி மூலம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar