Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா : ... கிருஷ்ணசுவாமி கோயிலில் ஆக., 1ல் மூலிகை மருந்து வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணசுவாமி கோயிலில் ஆக., 1ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
08:07

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மேல்பட்டி அருகே தர்மராஜா நகருக்கு மேற்கே உள்ள ஒரு பாறையில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் இருப்பதை, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.

இதுகுறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இப்பாறையில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்தினால் வரையப்பட்ட, 50க்கும் மேற்பட்ட ஓவியங்களில், பாண்டில் விளக்கு, குறியீடுகள் மற்றும் மனித உருவங்கள் உள்ளன. குறியீடுகளில், வட்டத்துக்குள் கூட்டல் குறி, அவற்றுக்கிடையே, 4 புள்ளிகள், பெருக்கல் குறியின்  இரண்டு முனைகளும் இணைந்த அமைப்பு மற்றும் ஆறு முனையுடன் கூடிய நட்சத்திரம், வட்டம் பல கட்டங்களாக பிரிக்கப்பட்ட கோலம் போன்ற அமைப்பு குறிப்பிடத்தக்கவை. வட்டம் மற்றும் சதுரத்துக்குள் மனிதன் வரையப்பட்டுள்ளது, இறந்த மனிதனை அடக்கம் செய்திருப்பதை காட்டுகின்றன. மேலும், இறந்தவர்களின் ஆன்மாவை குறிக்கும் பாண்டில் விளக்குகள் உள்ளன. இந்த ஓவியங்கள் இறந்தோரின் நினைவாக வரையப்பட்டுள்ளன. இப்பாறைக்கு அருகில், கல்திட்டைகள் இருந்ததை இந்த ஓவியத்தில் காட்டியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். வரலாற்றுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், மனோகரன், விஜயகுமார், வரலாறு ஆசிரியர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar