Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித அன்னாள் சுவக்கின் ஆலய விழா ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி வழிபாடு ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடி அமாவாசை : நிம்மதி நிலைக்க முன்னோரை வழிபடுவோம்
எழுத்தின் அளவு:
இன்று ஆடி அமாவாசை : நிம்மதி நிலைக்க முன்னோரை வழிபடுவோம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2022
06:07

வானில் சூரியன் சஞ்சரிப்பதன் அடிப்படையில் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலமாகும். இதில் கடக ராசியில் உள்ள சூரியனுடன் சந்திரன் இணையும் நாளான இன்று முன்னோரை வழிபடுவது அவசியம்.


இன்று நீங்கள் பிதுர்கடன்களை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடும், உங்களுக்கும் உங்கள் வம்சத்திற்கும் ஆசியளிக்கவும் முன்னோர்கள் காத்திருக்கிறார்கள்.

காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் அன்பும் ஆசியும் நமக்கு கிடைக்கும். பெற்றோர் இறந்த தேதி, திதி மறந்தவர்கள், திதி கொடுக்க தவறியவர்கள் கூட இன்று(ஜூலை 28) திதி கொடுப்பது நல்லது.


தந்தையைக் குறிக்கும் கிரகம் சூரியன் என்பதால் பிதுர்காரகர் என்றும், தாயைக் குறிக்கும் கிரகம் சந்திரன் என்பதால் மாதுர்காரகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆண்மை, நிர்வாக ஆற்றல், வீரத்தை அளிக்க வல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகத்தை தர வல்லவர் சந்திரன். இருவரும் இணையும் இந்நாளில் வழிபட்டால் மேற்சொன்ன நல்ல பலன்கள் கிடைக்கும். தன் தந்தை தசரதருக்கும், கழுகரசனான ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்து ராமர் வழிபட்ட போது சிவபெருமான் காட்சியளித்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்ததால் முன்வினைப் பாவங்கள் விலகுவதோடு எல்லா நன்மைகளும் தேடி வரும்" என்றார்.


இன்று முன்னோரின் படத்துக்கு பூமாலையிட்டு, அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை படைத்து வழிபட வேண்டும். காகத்துக்கு உணவிட்ட பின் சாப்பிட வேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் கொடுப்பதும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும் நல்லது. நிம்மதி நிலைக்க முன்னோரை வழிபடுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar