Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி : தங்க கவச அலங்காரத்தில் ... பழநி கோயில் அறங்காவலர் குழுவினர் பதவி ஏற்பு பழநி கோயில் அறங்காவலர் குழுவினர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2022
11:07

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, குழந்தை வரம் வேண்டி பெண்கள், மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமிகளின், 186வது குருபூஜை விழா, ஆடி அமாவாசையன்று நடப்பது வழக்கம். அதன்படி நேற்று நடந்தது. இதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது. அதன்படி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,   தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பெண்கள்,  குழந்தை வரம் வேண்டி கோவிலிலில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்று, பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சாதுக்கள் வழங்க, அதை பெண்கள்  சேலை மடியில்  பெற்று, அங்குள்ள குளக்கரையில் வைத்து, கைகளை பின்புறம் கட்டியவாறு மண்டியிட்டு, மண்சோறு சாப்பிட்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இங்கு வழிபாடு நடத்தி,  குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பணம், தானியம் உள்ளிட்ட போன்ற பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar