Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூரில் நாளை ஆடிப்பூர ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரத்தில் ஆடி தபசு திருவிழா பக்தர்கள் விரதம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவாலயபுரத்தில் ஆடி தபசு திருவிழா பக்தர்கள் விரதம் துவக்கம்

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2022
09:07

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் ஆடி தபசு திருவிழா சிறப்பு பூஜை வழிபாட்டுடன் இன்று துவங்கியது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இன்று ஆடிப் பூரத்தை முன்னிட்டு, மாலை 5.30 மணிக்கு, அருள்மிகு கோமதி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. கோமதி அம்மனுக்கு வளையல் மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தும்பைப்பட்டி சங்கரன் வழி பங்காளிகள் குடும்பத்தினர், மற்றும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு  எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம், எள் சாதம் அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். இன்று  31.07.2022, ஆடி மாதம் 15-ம் நாள்,  ஞாயிற்றுக்கிழமை ஆடி தபசு திருவிழா கொடி மரம் நடப்பட்டு, பக்தர்கள் இன்று அதிகாலை அழகர்மலை நூபுர கங்கையில் நீராடி, கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்து,  காப்பு கட்டி விரதம் துவங்கினார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar