திரௌபதி அம்மன் கோவில் விழாவில் கிருஷ்ணர் பிறப்பு ஊர்வலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2022 12:08
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோவில் விழா, ஜூலை 29 இல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், பிச்சனார்க்கோட்டை, பெத்தார்தேவன் கோட்டை , கீழக்கோட்டை ஆகிய கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவில், ஆர்.எஸ்.மங்கலம் விஸ்வகர்மா பொற்கொல்லர்கள் மண்டகப்படியாக கிருஷ்ணர் பிறப்பு நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கிருஷ்ணர் பிறப்பு குறித்த நிகழ்வுகள் பக்தர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணர், கருடன் வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வனவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து பேரவை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.