Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்து மாரியம்மன் கோவில் செடல் ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் ஐராவதம் உருவத்தில் யானை வீதி உலா வந்து அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் ஐராவதம் உருவத்தில் யானை வீதி உலா வந்து அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

06 ஆக
2022
01:08

திருச்செந்தூர் : ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தையொட்டி நேற்று திருச்செந்தூர் கோவில் யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா சென்றது. 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான், ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதனை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து வெள்ளை நிறத்தில் தெய்வானை யானையும்,தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாரும் சன்னதி தெரு வழியாக எட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து,பின்னர் மீண்டும் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனாரும்,சேரமான் பெருமானும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, வெள்ளை நிற யானையின் பின்னால் உள்பிரகாரத்தில் உலா வந்து, மீண்டும் 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தடைந்தனர்.  தொடர்ந்து அங்கு வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar