Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிச்செவ்வாய்: நோய் நீங்கி நலமுடன் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரத்தில் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
சிவாலயபுரத்தில் வளர்பிறை  பிரதோஷ சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

09 ஆக
2022
07:08

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத,  வளர்பிறை  பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, நந்தியம் பெருமாளுக்கும், சங்கரலிங்கம் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். சர்வ அலங்காரத்தில் பிரதோஷ மூர்த்தி, சங்கு நாதம், தீப ஆராதனைகளுடன், பக்தர்கள் பாடல்கள் பாட ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இன்றைய இறைப் பணியில் கச்சிராயன்பட்டியைச் சேர்ந்த சிவ.M.பாண்டி - சிவ.P. மீனா, சிவ.P.சங்கர் - சிவ. S. இளமொழி, சிவ. P. மணிகண்டன் - சிவ. M. அபிநயா குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு  வெண்பொங்கல், அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் மார்ச் 19 ஆம் தேதி உகாதி ஆஸ்தானத்தை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar