Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரநாராயண சுவாமி கோயிலில் ... மொஹரம் பண்டிகை: பூக்குழி இறங்கி இந்துக்கள் வழிபாடு மொஹரம் பண்டிகை: பூக்குழி இறங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடி தபசு விழா
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடி தபசு விழா

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
08:08

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமணமாகாத ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்று சென்றனர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம்,கமலம், யானை,கிளி விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும்,பூப்பல்லக்கு,சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு மண்டகப்படி நேற்று நடைபெற்றதை முன்னிட்டு வைகை ஆற்றுக்குள் தண்ணீர் செல்வதால் கோயில் முன்பாக மண்டகப்படி அமைக்கப்பட்டு அங்கு ஆனந்தவல்லி அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து விருஷப வாகனத்தில் சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சி கொடுத்தார்.பின்னர் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமியை சுற்றி 3 முறை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்றுச் சென்றால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பப்படுவதால் ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பெற்றுக் கொண்டு சென்றனர்.இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான  திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar