பதிவு செய்த நாள்
10
ஆக
2022
10:08
அனுப்பர்பாளையம்: அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள ஸ்ரீ அம்சவிநாயகர், சாந்த கருப்பராய சுவாமி, கன்னிமார் ஆகிய கோவில்களின், 12ம் ஆண்டு பொங்கல் விழா, கடந்த 7ம் தேதி முதல், துவங்கி நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி, நேற்று முன்தினம், காலை விநாயகருக்கு பொங்கல் வைத்தல், மாலை சலங்கை ஆட்டத்துடன் குதிரை வாகனம் எடுத்து வருதல் நடைபெற்றது. நேற்று மாலை 5:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வருதல், நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற்றது. இன்று, 10ம் தேதி காலை சாந்த கருப்பராய சுவாமிக்கு பொங்கல் வைத்தல், மதியம் மகா தீபாராதனை, உள்ளிட்டவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.