Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லி அம்மன் கோயிலில் 3008 பால்குடம் ... சங்கரன்கோவிலில் ஆடித்தபசு : கோமதி அம்மனுக்கு சுவாமி காட்சி சங்கரன்கோவிலில் ஆடித்தபசு : கோமதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆவணி அவிட்டம் : சந்ததிகளிடம் சேர்ப்பது நம் கடமை
எழுத்தின் அளவு:
இன்று ஆவணி அவிட்டம் : சந்ததிகளிடம் சேர்ப்பது நம் கடமை

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
07:08

இந்த திருநாளை கல்வித்திருநாள் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு வேதம் கிடைத்த நன்னாள் ஆவணி அவிட்டம்.

இதனால் இதனை வேதத்தின் ஆண்டு விழா என்றே சொல்லலாம். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் வேதம் ஓதும் அந்தணர்கள் நடத்தும் வழிபாட்டிற்கு உபாகர்மா என்று பெயர். வேதம் கற்கத் தொடங்குவதால் உபாகர்மா எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி புதிதாகப் பூணுால் அணிந்து வேதத்தை அத்யயனம் (படிக்க) செய்ய ஆரம்பிப்பர். தற்காலத்தில் கோயிலில் இந்த சடங்கை நடத்துகிறார்கள். வேத கால ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தர்ப்பணமும் கொடுப்பர்.

ரிக் வேதிகள் ஆவணி திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதிகள் ஆவணி பவுர்ணமியன்று உபாகர்மம் செய்வர். அதாவது ரிக் வேதிகள் நட்சத்திரத்தை வைத்தும், யஜுர் வேதிகள் திதியை வைத்தும் நாள் நிர்ணயிக்கிறார்கள். பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளாகவே அமையும். சாம வேதிகள் இன்னும் சில நாள் கழித்து பாத்ரபத மாத அஸ்த நட்சத்திரத்தன்று உபாகர்மாவைச் செய்வர். அநேகமாக விநாயகர் சதுர்த்தியன்றோ அல்லது அதற்கு முன்போ, பின்போ வரும். ஆவணி அவிட்டத்தை பெரும்பாலும் புதுப்பூணுால் அணியும் நாளாக கருதுகிறார்கள். உண்மையில் பூணுால் மாற்றுவது என்பது உபாகர்மாவின் ஓர் அங்கம் மட்டுமே.

பூணுால் அணிந்த பின் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது வழக்கம். மனதிற்குள் காம சிந்தனை நுழைவதற்குள் காயத்ரி தேவி நுழைய வேண்டும் என்பர். இந்த மந்திரத்தை ஜபிப்போரின் மனமும், உடலும் துாய்மை பெறும். அதனால் ஏற்படும் ஆன்மிக அதிர்வலைகளால் உலகமே நன்மை பெறும். உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழும். வேதம் நமக்கு அளித்த பெருஞ்செல்வமான காயத்ரி ஜபத்தை சந்ததிகளிடம் சேர்க்கும் கடமை பெற்றோருக்கு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் துலா ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற சண்டி யாகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar