Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெட்டியார்சத்திரத்தில் வழுக்கு ... விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல அபிஷேகம் விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
சங்கரநாராயண சுவாமி கோயிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
11:08

சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு பாலாலயம் நடந்தது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் 11ம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று’ என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் வகையில் சங்கரநாராயண சுவாமிக்கு னி சந்நிதி அமைந்திருப்பது இந்த கோயிலின் சிறப்பாகும். பாம்பு புற்றுக்கு தனி சந்நிதி அமைந்திருப்பதும் தனிச்சிறப்பாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் டந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகளை செய்வதற்கான திட்ட மதிப்பீடு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சங்கரநாராயண சுவாமி கோயிலில் ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணிகள் பாலாலய பூஜைகள் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் யாகசாலை அமைக்கப்பட்டு பூர்ணாஹூதி, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம், கும்பஅலங்காரம், ராஜகோபுரம் விமானங்கள், லாகர்ச்சணம், மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் யாகசாலை பூஜைகள் மீண்டும் தொடங்கியது. யாகசாலையில் மரத்திலான ராஜகோபுரம் மாதிரி வடிவத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கும்ப நீர் மூலஸ்தானத்திற்கு கொண்டு கொண்டுவரப்பட்டு. பாலாலய பூஜைகள் அனைத்தும் அதிகாலை 5.40 மணிக்கு முடிந்தது. திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் மையில் சங்கரநாராயண சுவாமி கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பாடசாலை மாணவர்கள் பூஜைகளை நடத்தினர். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ., ராஜா, கோயில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar