திருப்புல்லாணியில் மூன்று நாட்கள் நடந்த பவித்திர உற்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2022 03:08
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் கடந்த ஆக., 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக யாக வேள்விகள் நடைபெறுகிறது.
கோயிலில் ஓராண்டு முழுவதும் நடைபெறக்கூடிய பூஜை முறைகளில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்பட்டால், நிவர்த்தி செய்வதற்கான பூஜையாக பவித்திர உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப் பெருமாள் உற்ஸவ மூர்த்திகளாய் வீற்றிருந்தனர். பத்மாஸனி தாயார் சன்னதி வளாகத்தில் ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டு, பவித்திர மாலைகள் அணிவிக்கப்பட்டன. இன்று காலை பத்து மணியளவில் உற்ஸவருக்கு விசேஷ திருமஞ்சனம், சற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளி்ட்டவைகள் நடந்தது. பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் கோயிலில் உற்ஸவர் உள்பிரகார புறப்பாடுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், சென்னை காரிமாறன் கலை காப்பகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.