Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி 2வது ஞாயிறு : நாகராஜாவிற்கு பால் ... 32 அடி உயர அத்தி விநாயகர் வெள்ளோட்டம் 32 அடி உயர அத்தி விநாயகர் வெள்ளோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு திருக்கல்யாணம். நாளை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு திருக்கல்யாணம். நாளை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
11:08

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு, இரு தேவியருடன் இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் கருவறையில் உள்ள விநாயகர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில், கருவறை அமைய பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும் இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக, ராமபிரான், இலங்கை செல்வதற்கு முன்பாக, இந்த விநாயகரை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்ற கோயில் என்பதால், இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில், ஆண்டு தோறும், சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஆக.22 ல், கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சதுர்த்தி விழா துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில், வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில், விழாவின் எட்டாம் நாளான ஆக.29, இன்று, மாலை 4.15 மணிக்கு சித்தி, புத்தி, ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வடமாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கமான நிகழ்வாக உள்ள நிலையில், தென் தமிழகத்தில் இந்த விநாயகருக்கு மட்டுமே, இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுவதால், இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. திருக்கல்யாணத்தின் தொடர்ச்சியாக, நாளை ஆக.30, மாலை 06:00 தேரோட்டம் நடைபெற்று, மறுநாள் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar