Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.11 லட்சம் ரூபாய் நோட்டு ... காளஹஸ்தி சிவன் கோயிலில் அறங்காவலர் குழு கூட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் அறங்காவலர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
06:08

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு, இரு தேவியருடன் நடைபெற்ற திருக்கல்யாணத்திலும், விநாயகர் இரு தேவியருடன் திருமண கோலத்தில் நடைபெற்ற ஊர்வலத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோயில் கருவறையில் உள்ள, விநாயகர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப்பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். கோயிலில் சதுர்த்தி விழா ஆக. 22-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவில், தினமும் மாலையில் வெள்ளி மூசிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் எட்டாம் நாளான இன்று மாலை 04.55 மணிக்கு விநாயகருக்கு சித்தி, புத்தி, ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. வட மாநிலங்களில் மட்டுமே, விநாயகருக்கு திருமணம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிலையில், தென் தமிழகத்தில் இரு தேவியருடன், இந்த விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றதால், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து நடைபெற்ற கொழுக்கட்டை மொய் விருந்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் திருமண கோலத்தில் விநாயகர் வீதி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று மாலை தேரோட்டமும், நாளை சதுர்த்தி தீர்த்த வாரியும், நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar