Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி : ... ஈசன் பெற்ற ஆசை மகனே.. வீடு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் ஈசன் பெற்ற ஆசை மகனே.. வீடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகை காக்கும் ஈசன் பாதுகாப்புடன்.. ராஜாதி ராஜ மகாராஜ விநாயகர் பராக்!
எழுத்தின் அளவு:
உலகை காக்கும் ஈசன் பாதுகாப்புடன்.. ராஜாதி ராஜ மகாராஜ விநாயகர் பராக்!

பதிவு செய்த நாள்

31 ஆக
2022
07:08

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிய நிலையில்வியாபாரிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் விநாயகர் சதுர்த்திக்குத் தயாராகி வருகின்றனர்.

ராமநாதபுரம் வண்டிக்கார தெரு இளைஞர் அமைப்பினர் சேர்ந்து வித்தியாசமான வடிவமைப்பில் பிரம்மாண்ட விநாயகரை உருவாக்க திட்டமிட்டனர். இதற்காக ஆந்திர மாநிலம் சித்தூரில் 14 அடி உயரத்தில் அரியணையில் வீற்றிருக்கும்மகாராஜா போன்ற விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கு பின்புறம் கையில் சூலாயுதத்துடன் புஜபல பராக்கிரமத்துடன் சிவபெருமான் பாதுகாவலராக நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகை காக்கும் ஈசன் பாதுகாப்பில் ராஜாதி ராஜ மகாராஜ விநாயகர் சிலையானது ரூ.80 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்டுஉள்ளது. சிலை அழகை இவ்வழியே செல்வோர் பார்த்து பரவசமடைகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், உறியடி போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக இளைஞர் அமைப்பைச் சேர்ந்த ஹரிஹரன், பாலமுருகன் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் முக்கியபகுதிகளில் நேற்று ஆக.30 மாலை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள்நடக்கிறது. ராமநாதபுரத்தில் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாளை மறுநாள் செப்.2 மதியம் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு வழிவிடு முருகன் கோயில் வருகின்றன. அங்கிருந்து வண்டிக்காரத் தெரு, அக்ரஹாரத் தெரு வழியாக நொச்சியூரணிக்கு கொண்டு சென்று கரைக்கப்படும். ராமநாதபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar