Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ர ... திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிஷேகம் திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திருப்பதி பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திருப்பதி பிரம்மோற்சவம்

பதிவு செய்த நாள்

06 செப்
2022
08:09

திருப்பதி : திருமலை திருப்பதியில் ஆண்டு  முழுவதுமே விழாக்கள்தான் என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை  நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையானது. தமிழகத்தில் நவராத்திரி  என்ற பெயரில்  நடைபெறும் விழாதான்  திருமலையில் பிரம்மோற்சவ  விழா என்ற பெயரில்  நடைபெறுகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும்  இந்த விழாவில் உற்சவமூர்த்தியான  மலையப்பசுவாமி  காலையிலும் இரவிலும் விதவிதமான  வாகனங்களில்  வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாமி மாடவீதிகளில் வலம்வரும் போது அவருக்கு முன்பாக பல்வேறு மாநில  கலைஞர்களின் கவின்மிகு நடனங்கள்  இடம்பெறும் சுவாமியை தரிசிக்கவும், பக்தர்களின் நடனங்களை ரசிக்கவும்  என  வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் என பல லட்சக்கணக்கானவர்கள்  திருமலையில் கூடுவர். இதன்  காரணமாக இந்த வருட பிரம்மோற்சவத்தின்  போது அரசு முறையிலான விருந்தினர்கள் தவிர மற்ற  அனைத்து பிரமுகர்கள் 300 ரூபாய்  டிக்கெட் எடுத்துவரும்  பக்தர்கள் தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது,யாராக இருந்தாலும் இலவச தரிசனத்திற்கான வரிசையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.ஆகவே  நிச்சயம் தரிசனத்திற்கு நீண்ட நேரமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்  மத்தியில்  பிரம்மாண்டமாக திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ  நிகழ்ச்சிகள்:

27- 09 2022 கொடியேற்றம்  இரவில் பெரிய சேஷ வாகனம்
28 09 2022 காலையில் சின்ன சேஷ வாகனம்  இரவில்  அன்னவாகனம்
29 09 2022 காலையில்  சிம்ம வாகனம் இரவில் முத்துப்பந்தல்  வாகனம்
30 09 2022 கற்பகவிருட்ச வாகனம் இரவில்  சர்வபூபாள  வாகனம்
01 10 2022 காலையில்  மோகினி  அவதாரம் இரவில் கருட  வாகனம்
02 10 2022 காலையில் அனுமன் வாகனம் மாலையில் தங்கரதம் இரவில் யானை வாகனம்
03 10 2022 காலையில் சூரியபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம்
04 10 2022 காலையில் தேரோட்டம் இரவில் குதிரை வாகனம்
05 10 2022 காலையில்  சக்ரஸ்நானம் இரவில் கொடியிறக்கம்
-எல்.முருகராஜ்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar