Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா: ... குமரியில் ஒரு நாள் முன்னதாக ரம்ஜான்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகந்நாத பெருமாள் கோவிலில்24ல் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் ஏற்பாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2012
11:08

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த நாதன்கோயில் ஜெகந்நாத பெருமாள் திருக்கோவிலில் வரும் 24ம் தேதி சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடக்கிறது.108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும்.நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம்.பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த மண்ணுலகில் ஒப்பற்ற திவ்ய தேசமாகச் சிறப்பிக்கப்பட்டு, தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்தால், மாங்கல்யதடை, குழந்தை பேரி ன்மை, குடும்ப பிரச்னைகள், நாள்பட்ட நோய்கள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் வரும் 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) வளர்பிறை அஷ்டமி என்பதால், செண்பகவல்லித்தாயாருக்கு காலை 10 மணிக்கு சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar