Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவில் ரோப் கார் இயக்கம் ... ஸ்தலசயன பெருமாள் கோவில் விவகாரம்: 27ல் கருத்து கேட்பு! ஸ்தலசயன பெருமாள் கோவில் விவகாரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வித்தியாச விநாயகருக்கு வரவேற்பு சிலை தயாரிப்போர் சிலிர்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
10:08

நாமக்கல்: விநாயக் சதுர்த்தி நெருங்கி வருவதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளில், வித்தியாசமான தோற்றம் கொண்ட சிலைகளுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது என, சிலை தயாரிப்பு பணியில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர். வட மாநிலங்களைப் போல், தமிழகத்திலும், விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இந்தாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா, செப்டம்பர் 19ம் தேதி நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகளை பக்தர்கள் வைத்து வழிபாடு நடத்தி, அவற்றை ஆற்றில் கரைப்பது வழக்கம். அதை முன்னிட்டு பரவலாக விநாயகர் சிலைகள் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக, வித்தியாசமான தோற்றத்தில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, சிம்ம வாகனம், யானை வாகனத்தில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிப்பது போன்ற பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதையடுத்து, அவற்றுக்கான ஆர்டர்களும், சிலை தயாரிப்போருக்கு குவிந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து, நாமக்கல் செல்வ விநாயகர் கலைக்கூட உரிமையாளர் பிரபாகர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயர் சிலைகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டோ பாரீஸில் சிலை தயார் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.பத்து செ.மீ., உயரம் முதல், 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. சிலையின் அளவைப் பொறுத்து, அவற்றை தயார் செய்வதற்கான கால நேரம் பிடிக்கும்.மூன்றடி உயரம் வரை களி மண்ணால் சிலைகள் செய்யப்படும். அதற்கு அதிகமான உயரம் கொண்ட சிலைகள், கிழங்கு மாவு, பேப்பர் கூழ் மூலம் தயார் செய்யப்படும். சிலையின் சைஸ், ஸ்வாமி அமர்ந்துள்ள வாகனம், வண்ணத்திற்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.ஆர்டரின் பேரிலும் சிலைகள் தயார் செய்யப்படுகிறது. 12 அடிக்கு மேல் சிலை வைக்க போலீஸ் அனுமதியில்லை. எனவே, 12 அடி வரை மட்டுமே சிலைகள் செய்யப்படுகிறது. களிமண் சிலை வேண்டுவோருக்கு, அந்த மெட்டீரியலில் சிலைகள் செய்து தரப்படுகிறது.பண்டிகை நெருங்குவதால், விநாயகர் சிலை தயாரிப்பு பணி ஜரூராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் மற்றும் துறையூர், கரூர் மாவட்டத்துக்கும் சிலைகள் தயார் செய்து விற்பனைக்கு அனுப்புகிறோம்.இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar