காளஹஸ்தி சிவன் கோயிலில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2022 12:09
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு பிரபல பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக குடும்பத்தாரோடு வந்தவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு.தாரக சீனிவாசலு மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ வின் மகள் பவித்ரா ரெட்டி (ரேணிகுண்டா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் )சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள குரு தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு கோயில் தீர்த்த பிரசாதனங்களை வழங்கினர். மேலும் கோயில் அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் சாமி படத்தையும் வழங்கினர். கோயிலிலிருந்து வெளியில் வந்து நிருபர்களிடம் பி.வி சிந்து பேசுகையில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை ஆண்டுதோறும் தரிசனம் செய்வது மனதிற்கு மிகவும் ஆனந்தத்தை கொடுப்பதாகவும், இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் ,நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தான் தங்க பதக்கத்தையும் மிகவும் உயர்ந்த விருதான பத்மபூஷன் விருதை பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.மேலும் இவை அனைத்தும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் அருளால் கிடைத்தது என்றும் மேலும் எதிர்காலத்தில் மிக உயர்ந்த பதக்கங்களை பெறுவேன் என்றும் தெரிவித்தார்.