திருப்போரூரில் கிருத்திகை விழா : கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2022 03:09
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். அதன்படி, ஆவணி மாத கிருத்திகை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், சரவண பொய்கையில் நீராடினர். நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்தல் உள்ளிட்ட வேண்டுதல்களையும் பக்தர்கள் நிறைவேற்றினர்.