Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாதர் தரிசனம் : ஸ்ரீரங்கத்தில் ... காஞ்சிபுரம் கோவில் கோபுரத்தில் மரச்செடிகள் அகற்றம் காஞ்சிபுரம் கோவில் கோபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை ஐயாரப்பர் கோவிலில் திருவாசக முற்றோதலுக்கு தடை
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை ஐயாரப்பர் கோவிலில் திருவாசக முற்றோதலுக்கு தடை

பதிவு செய்த நாள்

24 செப்
2022
11:09

மயிலாடுதுறை : மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவிலில் திருவாசகம் முற்றோதலுக்கு சிப்பந்திகள்   தடை விதித்ததுடன் சிவனடியார்களை வெளியேற்றியதால் மோதல் ஏற்பட்டது.    

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாரப்பர் கோவில் அமைந்துள்ளது. அனவிந்தை வழிபாடு செய்த  பழமை வாய்ந்த இந்த  கோவிலில், சிவனடியார்கள் சார்பில்  மாதந்தோறும் மகம் நட்சத்திரத்தில்   திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வந்தது. நேற்று 52 ஆவது மாதமாக  திருவாசகரன் முற்றோதல் நடைபெற்றது. மதியம் பூஜை முடிந்து கோயில் நடை சாத்தாமல் நிகழ்ச்சி மாலை 4மணி வரை நடைபெற்று வந்த நிலையில் மதியம் ஒரு மணிக்கு நடை சாத்துவதற்கு முன்பாக திருவாசகம் படிக்கும் நிகழ்ச்சியை  முடித்து  கொள்ளுமாறு கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மதிய உச்சி கால பூஜை முடிந்த பிறகும் திருவாசகம் படிக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அப்போது மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் அங்கு வந்த திருவாவடு துறை ஆதீன மடத்தின் பணியாளர்கள்   திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை மேற்கொண்ட பக்தர்களை கோயில் ஆகம விதிப்படி மதியம் ஒரு மணிக்கு நடை சாத்த வேண்டும் என்று கூறி வெளியேற்றினர்.   மேலும்  திருவாசகம் பாடி மாகேஸ்வர பூஜை எனப்படும் அடியார்கள் உணவு உண்ணும் நிகழ்ச்சியின்போது அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது   இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிறுவன் மற்றும் பெண் ஒருவரை கோயில் நிர்வாகத்தினர் தாக்கியதாகவும், கோயிலில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளை நிர்வாகிகள் நடத்தாதது குறித்து கேள்வி எழுப்பியதால் சிவனடியார்களின் நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாகித்தனர் தடை விதிப்பதாக  சிவனடியார்கள் கூட்டத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கோயில் நடை சாத்துவதற்கு இடையூறு அளித்து சிவனடியார்கள் கூட்டத்தினர் கோயில் ஊழியரை தாக்கியதாக மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் கோவில் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தியபோது இருதரப்பினரும் பேசி சமரசம் செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பக்தர்களை கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றும் போது ஏற்பட்ட மோதல் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar