Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி ... வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி கொலு’ கோலாகல துவக்கம் வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்திற்கு அங்குரார்பணம்
எழுத்தின் அளவு:
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்திற்கு அங்குரார்பணம்

பதிவு செய்த நாள்

27 செப்
2022
06:09

திருப்பதி : திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் தங்கு தடையில்லாமல் நடக்க தேவஸ்தானம் நேற்று அங்குரார்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவத்தை நடத்தியது. திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நிறைவு பெறும்படியாக வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

இதன்படி இன்று முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் திருமலையில் தொடங்க உள்ளது. அக்.5ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த உற்சவம் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக உற்சவத்தின் முன்தினம் மாலை அங்குரார்பணத்தை தேவஸ்தானம் நடத்தியது. இதையடுத்து நேற்று மாலை ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனர் தலைமையில் அர்ச்சகர்கள் குழு அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று அங்கிருந்து புற்றுமண்ணை மண் பாத்திரத்தில் எடுத்து வந்தனர். இந்த புற்று மண்ணை கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் பரப்பி அதில் பூதேவியின் உருவத்தை வரைந்தனர்.பூதேவியின் வயிற்று பகுதியிலிருந்து மண் எடுத்து அதை சிறிய மண்தொட்டிகளில் நிரப்பி அதில் நெல், கேழ்வரகு, பச்சை பயிறு, காராமணி, கோதுமை ,கொள்ளு, மொச்சை, கொண்டை கடலை, உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை ஊறவைத்து முளைவிடும் உற்சவத்தை நடத்தினர். பிரம்மோற்சவம் நிறைவு பெறும் வரை இதற்கு தினசரி நீர் தெளித்து பாதுகாப்பது வழக்கம். பின்னர் இந்த நவதானியம் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar